கொழும்பில் மரக்கிளை முறிந்து பெண் உயிரிழப்பு

கொழும்பில் மரக்கிளை முறிந்து பெண் உயிரிழப்பு

கொழும்பில் மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஆவார்.

கொழும்பில் மரக்கிளை முறிந்து பெண் உயிரிழப்பு | Woman Dies Falling From Tree Branch In Colombo

குறித்த பெண் வீதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர் மீது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்துளார்.

இதனையடுத்து பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.