
இளம் பெண் ஒருவரை தேடி உதவி கோரும் பொலிஸார்!
ஒரு இளம் பெண் காணாமல் போனது தொடர்பாக. மாவனெல்ல பொலிஸ் பிரிவில் உள்ள கெடப்பா, கலத்தரா என்ற முகவரியில் வசிக்கும் ஒருவர் தனது மகள் 2025.07.28 முதல், காணாமல் போனதாக மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , யுவதியை கண்டு பிடிக்க பொதும்க்களின் உதவியை கோரியுள்ளனர்.
காணாமல் போனவர் 21 வயதான எதிரிசிங்கே தருஷி சேவ்வந்தி திசாநாயக்க என பொலிசார் தெரிவித்ததுடன் பெண்னின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன இளம் பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், 071-8591418 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.