யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம்

யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.820 மில்லியனுக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளதாக போக்குவரத்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஒரு பாழடைந்த வசதியாக மாற அனுமதிக்காமல் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2021 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 150 மில்லியனையும், 2022 ஆம் ஆண்டில் ரூ. 230 மில்லியனையும், 2023 ஆம் ஆண்டில் ரூ. 210 மில்லியனுக்கும் அதிகமான இழப்பையும், 2024 ஆம் ஆண்டில் ரூ. 140 மில்லியனையும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை ரூ. 80 மில்லியனையும் இழந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம் | Jaffna Airport Loses Millions Of Dollarsகடந்த ஆறு ஆண்டுகளில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு 3,327 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்துள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரத்து எழுநூற்று தொண்ணூற்று ஆறு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் 140 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2021 ஆம் ஆண்டில் 32 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2022 ஆம் ஆண்டில் 383 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளன.

யாழ்.சர்வதேச விமான நிலையம் விழுங்கிய மில்லியன் கணக்கான பணம் | Jaffna Airport Loses Millions Of Dollars

மேலும், 2023 ஆம் ஆண்டில் 864 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2024 ஆம் ஆண்டில் 1156 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும், 2025 ஜூலை வரை 752 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும், அது ஒரு வணிகத் திட்டத்தின்படி செய்யப்படும் என்றும் அமைச்சர் பிமல் வலியுறுத்தியுள்ளார்.