
ஹோட்டலில் தொழில் அதிபர் இளம்பெண்ணுடன் உல்லாசம்; காத்திருந்த அதிர்ச்சி
தொழில் அதிபருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் அவரது 10 பவுன் செயினை திருடி கொண்டு ஓட்டலில் இருந்து தப்பி சென்ற சம்பவத்தால் தொலிலதிபர் அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சென்னையை சேர்த 47 வயது தொழில் அதிபர் அங்குள்ள பிரபல ஓட்டலுக்கு அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காதலியான இளம்பெண்ணுடன் சென்று இருவரும் மதுகுடித்துள்ளனர்.
இருவருக்கும் போதை தலைக்கு ஏறிய நிலையில் இருவரும் அதே ஓட்டலில் அறை எடுத்து தங்கி இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது தனது அருகில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் காணாமல் போயிருந்தார். தொழில் அதிபர் கழுத்தில் அணிருந்திருந்த 10 பவுன் நகையும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் அவரது செயினை திருடி கொண்டு ஓட்டலில் இருந்து தப்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஏமாந்த தொலிலதிபர் அதிச்சியடைந்து சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் 10 பவுன் நகையுடன் தப்பி ஓடிய கில்லாடி பெண்ணை தேடி வருகிறார்கள்.
தலைமறைவான பெண் தொழில் அதிபரின் காதலி ஆவார். இருவரும் இது போன்று அடிக்கடி வெளியில் தங்கி உல்லாசமாக இருப்பது வழக்கம் என கூறப்படும் நிலையில், பொலிஸார் யுவதியை வலைவீசி தேடிவருவதாக கூறப்படுகின்றது.