மீண்டும் உச்சம் தொடும் நிலையில் முட்டையின் விலை

மீண்டும் உச்சம் தொடும் நிலையில் முட்டையின் விலை

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை ரூபாய் 50 முதல் 60  ரூபாய்  வரை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள தீர்க்கப்படா விட்டால் எதிர்வரும் காலத்தில் முட்டையின் விலை உயரும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.

இதேவேளை,  நாட்டின் பல பகுதிகளில் வாழைப்பழ விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மீண்டும் உச்சம் தொடும் நிலையில் முட்டையின் விலை | Egg Prices Will Increase Soon

கடந்த மாதங்களில் ஒரு கிலோ வாழைப்பழத்திற்கு ரூ. 120 வரை கிடைத்த விலை, தற்போது ரூ. 40 முதல் ரூ. 60 வரை குறைந்துள்ளதால், விவசாயிகள் பழங்களை வெறும் சாலையோரங்களில் கழிவாகவே வீசும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைப்பழங்கள் அதிகமாக இருப்பதாலும், வாழைப்பழ விற்பனை குறைந்ததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

மேலும் பொருளாதார நிலையத்தில் புளி வாழைப்பழம் 10 ரூபாய்க்குக் கூட விற்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள்  தெரிவித்தனர்.