
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
மத்திய வங்கி வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறானாதொரு பின்னணியில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தரப்பும் தெளிவு படுத்தியிருந்த நிலையில், தற்போது மத்தி வங்கியும் அறிவித்துள்ளது.