கொழும்பில் வீடொன்றில் தீ விபத்து! ஒருவர் பலி

கொழும்பில் வீடொன்றில் தீ விபத்து! ஒருவர் பலி

நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் நபரொருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள 397 இலக்க தோட்டத்தில் உள்ள வீடொன்றில் இன்று(23) அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தீயில் சிக்கி காயமடைந்த நிலையில் காணப்பட்ட நபரொருவரை பொலிசார் மீட்டு, தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கொழும்பில் வீடொன்றில் தீ விபத்து! ஒருவர் பலி | Fire In A House In Colombo One Dead

எனினும் பாரதூரமான தீக்காயங்கள் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

தீவிபத்துக்குள்ளான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 50 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.