
பரீட்சை முறைகளில் ஏற்படப்போகும் மாற்றம்
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் பரீட்சை முறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு சுமையாக இல்லாத வகையில் பரீட்சை உள்ளடக்கத்தை மாற்றும் செயல்முறை 2028 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
அத்தோடு, தவணை பரீட்கைள் தொடர்பான இறுதி முடிவை எடுக்க நாளை கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறையை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.