தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 2024 ஏப்ரல் மாதம் முதல் ரூ.17,500 இலிருந்து ரூ.27,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்

மேலும், 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் அந்த தொகை ரூ.30,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இவ்விவரத்தை அவர் ஜூலை 22, செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைக்கும்போது வெளியிட்டார்.

தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Information Released Private Salary Increases

அரசாங்க ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தனியார் துறையினரின் நலனையும் கருத்தில் கொண்டு சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்களின் மூலம் விரிவான ஒருமித்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ரூ.30,000 என்பது தற்போதைய பணவீக்க நிலைக்கு ஒப்புகொள்ளத்தக்கதாக இல்லையென்றும், இன்று ஒரு குடும்பத்திற்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் தேவைப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநாட்டி உற்பத்தியை அதிகரித்தாலே உயர்ந்த சம்பள நிலைக்கு செல்ல இயலும் எனவும் அமைச்சர் அனில் பெர்ணான்டோ வலியுறுத்தினார்.