இலங்கைக்கு அமெரிக்கா விதித்த நிபந்தனை

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த நிபந்தனை

பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில், அமெரிக்க அதிகாரிகள், இலங்கை சீனாவுடனான வர்த்தகத்தில் ஈடுபட சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர்.

எனினும், இலங்கை அதன் நடுநிலை வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க கொள்கையளவில் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளில் மிகப்பெரிய குறைப்புகளைப் பெற்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இதன்படி, அமெரிக்க சந்தைக்கு செல்லும் இலங்கைப் பொருட்களுக்கு, 44 வீதத்துக்கு பதிலாக, 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த நிபந்தனை | Condition Imposed By The Us On Sri Lankaஅமெரிக்காவுடன் வர்த்தகத்தில் போட்டியிடும் பங்களாதேஷ், மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற பிற நாடுகளை விட கட்டண விகிதம் குறைவாக இருப்பதால் இலங்கை திருப்தி கொண்டுள்ளது.

இருப்பினும், ஆடை ஏற்றுமதியில் இலங்கைக்கு நேரடி போட்டியாளராக இருக்கும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு, தம்மை விட குறைந்த வரிகளை, அமெரிக்கா விதித்ததில் இலங்கை கவலை கொண்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் ஒரு சமரச அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்து, வரி விகிதங்களை மேலும் குறைப்பதற்காக அமெரிக்க அதிகாரிகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறது.

இதற்கு மத்தியில், சீனாவுடனான வர்த்தகத்தில், இலங்கைக்கு, அமெரிக்கா சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

எனினும், தமது, அனைத்து பங்காளர்களுடனும் நியாயமான வர்த்தகம் தேவை என்பதால், இலங்கை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.