ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (Ministry of Public Administration, Home Affairs, Provincial councils and Local Government) தெரிவித்துள்ளது.

அத்துடன் 500,000க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பொதுத்துறை ஊழியர்கள் அதிகரித்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளால் பயனடைவார்கள் என்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna) குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Increased Pension Payment Give From This Month

இதேவேளை 2017.01.01ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய முப்படை உத்திதயாகத்தர்களின் ஓய்வூதியம் 2019.05.31 ஆம் தினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 04/2019 மூலம் 2017.01.01 ஆம் தினத்திற்கு உாித்தாக வேண்டிய சம்ளத்தின் மீது அடிப்படைடயாக தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.