இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

கொழும்பில் இருந்து ஹட்டன் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இடம்பெற்ற இந்த விபத்தில் கார் சாரதி படுகாமடைத்துள்ள நிலையில் பேருந்தில் சென்ற பயணிகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.

Srilanka Bus Accidentஇந்த விபத்து ஹினிகத்தை அருகேயுள்ள கித்துல்கல எனும் இடத்தில் இடபெற்றதாக தெரியவருகின்றது.

விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், இ.போ.ச பேருந்தும் சேதமடைத்துள்ளது.

Srilanka Bus Accidentகாயமடைந்த காரின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கடந்த நாட்களில் இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.