பரீட்சையில் மகன் Failஆனதை கொண்டாடிய பெற்றோர்!

பரீட்சையில் மகன் Failஆனதை கொண்டாடிய பெற்றோர்!

 மகன். பரீட்சையில் Fail ஆனதை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா ஆங்கில பாடசாலையில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சமீபத்தில், பத்தாம் தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. எல்லா பாடங்களிலும் சித்திபெறாமல் அபிஷேக் 600இற்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

பரீட்சையில் மகன் Failஆனதை கொண்டாடிய பெற்றோர்! | Parents Celebrate Son S Failure In Exam Karnataka

இந்நிலையில் மாணவனின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக் வெட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், 'நீ பரீட்சையில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது" என்று ஊக்கப்படுத்தினர்.

பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார்.

'நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் பரீட்சை எழுதுவேன். நான் பரீட்சையில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன் என நம்ப்பிகைட்யுடன் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.