தந்தை - மகன் படுகொலையில் சகோதர்கள் கைது

தந்தை - மகன் படுகொலையில் சகோதர்கள் கைது

நொச்சியாகம யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை நடந்த இடத்தை பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது, ​​பொலிஸ் மோப்ப நாய்கள் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை நோக்கி ஓடியுள்ளது.

தந்தை - மகன் படுகொலையில் சகோதர்கள் கைது | Brothers Arrested In Father Son Murder Case

முன்பு இடம்பெற்ற கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களின் தந்தையைக் கொன்றுள்ளதாகவும், இது அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.