இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 778,843 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 56,567 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்தே அதிகச் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lanka Tourist

இந்தியாவில் இருந்து 10,595 பேரும், பிரித்தானியாவில் இருந்து 7,679 பேரும், ரஸ்யாவில் இருந்து 6,163 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.