மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 600-700 , ஒரு கிலோ கரட் 400 , ஒரு கிலோ நுவரெலியா உருளைக்கிழங்கு 600 ரூபா, ஒரு கிலோ தக்காளி 800 ரூபா விலையில் விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு | Sudden Increase In Vegetable Prices In Srilanka

மேலும், தேங்காய் விலை 180 முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மரக்கறிகளின் விநியோகம் இல்லாததால், விலை உயர்வு ஏற்பட்டுள்லதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையும் இந்த திடீர் மரக்கறி விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.