திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை!

திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை!

இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு 2.5 முதல் 5 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை! | Fraudulent Marriage Sales Girl Trust Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.

திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை! | Fraudulent Marriage Sales Girl Trust Rajasthan

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து பொலிஸாரிடம் புகார் அளித்த பின்பு மோசடி அம்பலமாகியுள்ளது.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்

பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள்.

திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை! | Fraudulent Marriage Sales Girl Trust Rajasthan

காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார். சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1,500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்தார்.