
ஆசிரிய சேவையில் இணையக் காத்திருப்போருக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான வருடங்களில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான தகவல்கள் நிகழ்நிலை முறைமை மூலமாகச் சேகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய teacher.moe.gov.lk ஊடாக, எதிர்வரும் 28 திகதி வரையில் குறித்த பயிலுனர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.