
யாழில் தகராறில் ஈடுபட்ட இளைஞன் கைது
போதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞன் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.