முதியவரின் உயிரை பறித்த பஸ்; சாரதி கைது

முதியவரின் உயிரை பறித்த பஸ்; சாரதி கைது

கம்பஹா - கொழும்பு வீதியில் ஸ்ரீபோதி சந்தியில் நேற்று  (21) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஸ்வத்தையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முதியவரின் உயிரை பறித்த பஸ்; சாரதி கைது | Bus Driver Arrested After Being Hit By Elderly Man

விபத்தின் போது, படுகாயமடைந்த முதியவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளதுடன். பொலிஸாரால்  பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸார்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.