நாட்டில் அரிசிக்கு தட்டுபாடு; நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்ட தகவல்

நாட்டில் அரிசிக்கு தட்டுபாடு; நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்ட தகவல்

தற்போது சில பகுதிகளில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சில அரிசி வகைகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பா 270 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அரிசிக்கு தட்டுபாடு; நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்ட தகவல் | Lack Of Rice In The Country Consumer Authority

அரிசிக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக  கூறி,  சில ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்  சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர்  அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அரிசிக்கு விதிக்கப்பட்ட மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை மாற்றப்படவில்லை என  நுகர்வோர் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ நாட்டு அரிசி 230 ரூபாயாகவும் , ஒரு கிலோ சம்பா அரிசி 240 ரூபாயாகவும், ஒரு கிலோ கிரி சம்பா 260 ரூபாயாகவும் இருக்கும் என்றும் நுகர்வோர் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.