ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் இன்று மகிழ்ச்சியான நாள்...

ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் இன்று மகிழ்ச்சியான நாள்...

இன்று இந்திய வரலாற்றில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் முக்கியமான நாள்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.

ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக கோடிக்கணக்கான ராம பக்தர்கள் ராம் என்று பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியுள்ளனர்.

இந்த செங்கற்கள் அனைத்தும் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பல ஆண்டுகளாக தவம் இருக்கின்றனர்.

உருவாகும் ஆகாயிலுக்காக இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அயோத்தியில் பூமி பூஜை பணிகள் நடைபெறுவதால் அயோத்தி மாநகரமே கடந்த சில நாட்களாவே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ராமர் கோவிலுக்கு வருவதற்கு முன்பு மோடி அனுமான் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.

ராம ஜென்ம பூமியில் பாரிஜாத பூக்கள் பூக்கும் செடிகளை நடுகிறார்.

பூமி பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை காரணமாக அயோத்தி நகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழா நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்க உள்ளனர். பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.