இலங்கைக்கு வருகிறது எரிபொருள்! வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கு வருகிறது எரிபொருள்! வெளியான மகிழ்ச்சித் தகவல்

இந்த மாதம் நாட்டிற்கு வருவது உறுதிசெய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் எரிபொருள் இருப்புகளிலிருந்து ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டிற்கு போதுமான எரிபொருள் கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து கடல்வழிப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதன் பின்னணியில் இந்த விலை அதிகரிப்பு பதிவானது.

இலங்கைக்கு வருகிறது எரிபொருள்! வெளியான மகிழ்ச்சித் தகவல் | Sufficient Fuel For Sri Lanka Until End Of April

அதனடிப்படையில், போர் சூழலை கருத்தில் கொண்டு இலங்கையிலும் எரிபொருட்களின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.