
புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா...!
வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புதிய மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 1 மில்லியன் (10 இலட்சம் ரூபாய்) என தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் நிறுவனம் ஒன்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய பல்சர் N160 மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 934,950 என்று அறிவித்துள்ளது.
புத்தம் புதிய டிஸ்கவர் 125 DRL மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 731,950 மற்றும் புதிய CT 100 ES மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 637,950 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமொன்று முச்சக்கர வண்டிகளுக்கான முன்கூட்டிய ஓடர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டியின் விலை, பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.16,90,678 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெறுமதி வரி சேர்க்கப்பட்டு, ஒரு புதிய முச்சக்கர வண்டியின் விலை ரூ.19,95,225 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன இறக்குமதி வரிகளை குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களை தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பானது வேறொரு வர்த்தமானி மூலம் திருத்தப்படும் வரையில் மாற்றமடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.