சாம்பியன்ஸ் கிண்ணம் 2025 - இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் கிண்ணம் 2025 - இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) (ICC Champions Trophy 2025) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி தொடரின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா (India) - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

துபாயில் (Dubai) உள்ள நேஷனல் மைதானத்தில் இன்று (23.02.2025) இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இதேவேளை, ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் மூன்றில் பாகிஸ்தானும் இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும், சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இன்று போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.