
இலங்கையில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு நடந்த கதி
குருநாகல் பகுதியில் அரிசியை பதுக்கி விற்பனைக்கு இல்லை என கூறிய வியாபாரிக்கு எதிராக, நுகர்வோர் அதிகார சபையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வியாபாரி அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த 21.02.2025 அன்று, வியாபாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, வியாபாரி தனது தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புடைய 237 கீரி சம்பா அரிசிப் பொதிகளை அரசுடைமையாக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வியாபாரிக்கு 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், பதுக்கல் மற்றும் மோசடி செய்வதன் மூலம் நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.