பிபிசி நிறுவனத்துக்கு இந்திய வரி நிறுவனம் விதித்த அபராதம்

பிபிசி நிறுவனத்துக்கு இந்திய வரி நிறுவனம் விதித்த அபராதம்

அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பிபிசி வேர்ல்ட் சேர்வீஸ் இந்தியா(India) நிறுவனத்திற்கு இந்திய அமுலாக்க இயக்குநரகம் 3.44 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 21ஆம் திகதி வெளியான அந்த உத்தரவில், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் பிபிசி நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களுக்கு தலா ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இயக்குநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துடன் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளுக்கும் ரூ .5,000 அபராதம் அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் இந்திய ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

பிபிசி நிறுவனத்துக்கு இந்திய வரி நிறுவனம் விதித்த அபராதம் | Bbc Violates Foreign Exchange Act Fined Rs 3 34 Cr

2023 பெப்ரவரியில் டெல்லி,மும்பை ஆகிய மாநிலத்தில் உள்ள ‘பிபிசி’ வளாகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் லாபத்தை திசைதிருப்பி பணமோசடியில் அந்நிறுவனம் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.