கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வட்ஸ்அப் உரையாடலில் சிக்கிய ரகசியம்

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வட்ஸ்அப் உரையாடலில் சிக்கிய ரகசியம்

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர்.

இதன்போது கொமாண்டோ சலிந்த, "நீ வேலையைச் செய்" என்றார். வெளியே எல்லாம் சரி. பயப்படாதே. சுடு. எல்லாம் சாதகமாகவுள்ளது.

"பயப்படாமல் சுடு என குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "உள்ளே பிரச்சினை இல்லையே?"​ "நான் உள்ளே இருக்கிறேன்" என்றார். "எதுவும் இல்லை, நீ ரெடியாகு சுடுவதற்கு" முடித்தே விடு.

 

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வட்ஸ்அப் உரையாடலில் சிக்கிய ரகசியம் | Caught Whatsapp Conversation Sanjeeva S Murder

எல்லாம் சரியா இருக்கு" என்றார் கெமாண்டோ சலிந்த . துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "அப்படியானால் பொலிஸார்?" என்று கேட்டார். "எல்லாம் சரியாக உள்ளது" நீ வேலையை செய் என்று கொமாண்டோ கூறியுள்ளார்.

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கெமாண்டோ சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் அவர், "அவன் இறந்துவிட்டானா?" என்று கேட்டார். "இறந்துவிட்டான்" என்று கொமாண்டோ சலிந்தவுக்கு துப்பாக்கிதாரி பதிலளித்தார்.

"அருமை" என்று பதிலளித்த பிறகு, கொமாண்டோ சலிந்த "நீ என் உயிர்" என்று பதிலளித்தார். “ஏன் இப்படி கூறுகிறீர்கள், நீங்கள் தான் எனக்கு உணவளித்து தந்தை போல் கவனீத்தீர்கள்.

நீங்களே என் உயிர்” என துப்பாக்கிதாரி குறிப்பிட்டார். சகோதரி இன்னும் அங்கேயே தான் இருக்கிறாள். "நான் இங்கே இருக்கிறேன்," என்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மேலும் தெரிவித்துள்ளார்.