வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பமான வானிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளை வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும்.

வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Warning Issued To The Public Regarding Hot Weather

நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.