யாழில் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு | One Dead In Jaffna Funeral Procession Accident

கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம்  (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.