யாழ் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

 யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் வைரவர் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் (20) மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார்.

யாழ் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு | Youth Injured In Jaffna Accident Dies

குறித்த இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.