தொழில் தளங்களில் இடம்பெறும் விபத்துக்கள்: அதிகரித்துள்ள உயிரிழப்புகள்

தொழில் தளங்களில் இடம்பெறும் விபத்துக்கள்: அதிகரித்துள்ள உயிரிழப்புகள்

பணியிடங்களில் இடம்பெறும் விபத்துக்களால் வருடாந்தம் சுமார் 70 பேர் உயிரிழப்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய விபத்துக்களினால் சுமார் 2000 பேர் காயமடைவதாகவும் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார்.

இதற்கமைய பணியிடங்களை இலக்காகக் கொண்டு அனைவருக்கும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தொழில் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் தளங்களில் இடம்பெறும் விபத்துக்கள்: அதிகரித்துள்ள உயிரிழப்புகள் | Accidents Industrial Sites Increased Fatalitiesகிளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து பணியிடங்களிலும் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.