தழிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

தழிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில்(Kilinochchi) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவமானது நேற்று(11.02.2025) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிளிநொச்சியிலிருந்து பரந்தன் பக்கம் நடந்து சென்றவரை, அதே திசையில் வந்த தனியார் பேருந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தழிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி | One Died In Bus Accident In Kilinochchi

மேலும், குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.