பிறந்து மூன்று நாள் ஆண் குழந்தையின் வயிற்றில் இரட்டை கருக்கள்

பிறந்து மூன்று நாள் ஆண் குழந்தையின் வயிற்றில் இரட்டை கருக்கள்

இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு 'கருவில் கரு' இருப்பது கண்டறியப்பட்டது.

புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்தது.

அங்கு வைத்தியக்குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது.

பிறந்து மூன்று நாள் ஆண் குழந்தையின் வயிற்றில் இரட்டை கருக்கள் | Twin Fetuses Womb Of A Three Day Old Newborn Baby

அமராவதி பிரதேச மருத்துவமனையில் வைத்திய நிபுணர் ஒருவரின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

 வைத்திய நிபுணர் மூன்று நாள் ஆண் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு கரு இருந்ததாக கூறினார்.

அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர் என்றும் கூறினார்.

அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர், பேசுகையில், 'கருவில் கரு' என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்று இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது.என்று தெரிவித்தார்.