இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு- விஜேராமாவில் உள்ள  இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர். இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Increase In Hiv Diseases Among Young People In Sl

குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

 பல இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டுபிடிக்கின்றனர். எல்லோரும் சமூக ஊடகங்களைப் பற்றி நினைப்பதில்லை, ஆனால் இளைஞர்கள் பல்வேறு உறவுகளை உருவாக்க சில டேட்டிங் பயன்பாடுகள் உள்ளன