கிணற்றில் விழுந்து ஒரு வயது நிரம்பிய குழந்தை பலி

கிணற்றில் விழுந்து ஒரு வயது நிரம்பிய குழந்தை பலி

மெதகம பகுதியில் 1 வயது நிரம்பிய குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) மாலை மல்கஸ்தலாவ (Malkasthalawa) - மாகல்லகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசித்து வந்த 01 வயது 02 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குழந்தை தாயுடன் வீட்டில் இருந்த போது தாய் உறங்கிய நிலையில் வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிணற்றில் விழுந்து ஒரு வயது நிரம்பிய குழந்தை பலி | 1 Year Old Boy Trapped After Falling Down Well

குழந்தையின்சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.