U19 T20 World cup:இந்திய மகளிர் அணி அபார வெற்றி
ஐசிசி U19 மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய U19 மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
தென்னாபிரிக்க U19 மகளிர் அணியுடன் கோலாலம்பூரில் இன்று (2) இடம்பெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க U19 மகளிர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர், 83 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய U19 மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.