பேஸ்புக் மெசஞ்சர் ரூமினை வாட்ஸ் ஆப் வெப்பில் உருவாக்குவது எப்படி?

பேஸ்புக் மெசஞ்சர் ரூமினை வாட்ஸ் ஆப் வெப்பில் உருவாக்குவது எப்படி?

பேஸ்புக்கினால் அறிமுகம் செய்யப்பட்ட மெசஞ்சர் ரூம் வசதியின் ஊடாக 50 நபர்கள் வரையில் ஒரே நேரத்தில் வீடியோ சட் செய்ய முடியும் என்பது தெரிந்ததே.

அதேபோன்று வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 8 பேர் வரையில் மாத்திரமே வீடியோ சட்டில் ஈடுபட முடியும்.

எனினும் தற்போது பேஸ்புக் மெசஞ்சர் ரூமினை இணைத்து வாட்ஸ் ஆப்பிலும் 50 பேர் வரை வீடியோ சட்டில் ஈடுபடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதனை வாட்ஸ் ஆப் வெப்பில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வசதியினைப் பெறுவதற்கு வாட்ஸ் ஆப் வெப்பில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் “Create a Room” என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இப்போது மெசஞ்சர் ரூம் பக்கத்திற்கு செல்லும் அங்கு பேஸ்புக் கணக்கினுள் உள்நுழைய வேண்டும்.

அதன் பின்னர் Mic, Camera என்பவற்றினை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

இப்போது மெசஞ்சர் ரூம் உருவாக்கப்பட்டுவிட்டது.

தொடர்ந்து பெறப்படும் URL இனை நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைக்க வேண்டும்.

இதேவேளை ஏனையவர்கள் அல்லது விரும்பத்தகாத நபணர்கள் மெசஞ்சர் ரூமில் இணைவதை தடுக்க லாக் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.