பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ; மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ; மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ; மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை | Warning To Fishermen And Navy Heavy Rains Expected

சுற்றுச்சூழல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு இந்த அறுவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இது இன்று (27) பிற்பகல் 1:30 மணி வரை செல்லுபடியாகும்.

கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) வரை அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.