யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்?

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்?

 யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்றைய தினம்(21) சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாக அறிவித்துள்ளனர்.

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்? | Baby S Body With Umbilical Cord In Jaffna

இதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, வைத்தியசாலையில் ஒப்படைத்த சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.