யாழில் பெற்றோரின் கவனயீனத்தால் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

யாழில் பெற்றோரின் கவனயீனத்தால் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இதன்போது கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் பெற்றோரின் கவனயீனத்தால் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு | One Year Old Child Dies Parental Negligence Jaffna

இன்று மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடிக்கொண்டிருந்ததது.

இதை அவதானித்த தாயார் குழந்தையை தூக்கினார். அப்போது குழந்தை மயக்கமடைந்தது.

பின்னர் வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.