யாழ் விபத்தில் ஒருவர் பலி; சாரதி தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வட்டு க்கோட்டையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தை நடாத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில்,விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
05 January 2025