யாழ் விபத்தில் இளைஞன் மரணம்; மாட்டால் பறிபோன உயிர்

யாழ் விபத்தில் இளைஞன் மரணம்; மாட்டால் பறிபோன உயிர்

யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தாவில் வித்துவான் ஒருவரின் மகனே உயிரிழந்துள்ளார்.

Jaffna Accidentயாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்து இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.

படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.