யாழில் மேலும் இருவருக்கு எலிக்காச்சல்; அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

யாழில் மேலும் இருவருக்கு எலிக்காச்சல்; அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று(24 )இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் மேலும் இருவருக்கு எலிக்காச்சல்; அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! | Two More People In Jaffna Have Rat Fever4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தற்போது முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு வர வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நோய் தீவிரமாகுவதையும் இறப்பையும் தடுக்கலாம், குறைக்கலாம் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.