யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து பெண் உயிரிழப்பு

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து பெண் உயிரிழப்பு

யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம்(22) நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும் வயோதிப பெண்ணொருவர் வீட்டு கிணற்றில் நீர் அள்ளும் போதே தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து பெண் உயிரிழப்பு | Woman Dies After Falling Into Well In Jaffna

 

மரணம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி முன்னெடுத்தார்.

மேலும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் வயோதிபப் பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.