யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியின் காதை கடித்த நபர்

யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியின் காதை கடித்த நபர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியின் காதை கடித்த நபர் | Man Bites Security Guard At Jaffna Hospital

இந்தநிலையில், காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.