கொழும்பு ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

கொழும்பு ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

  கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பு | Air Pollution Increases In Many Parts Country 

இதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியில் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின் போது யாழ்.மாவட்டக் காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக மக்களுக்குத் தெரிவிக்கும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காற்றின் தரம் தொடர்பில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கலாநிதி உமாசுகி நடராஜா என்பவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.