வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (18.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Heavy Rain With Thunder Weather In Tamil

வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Heavy Rain With Thunder Weather In Tamilஎனவே, மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறி வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.