புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் | Information Released Regarding Import New Vehicles

இந்த நிலையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள், இந்த வாகனங்கள், சுற்றுலாத் துறையினருக்கு வழங்கப்படவுள்ளன.

இது தொழில்துறையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது என்று டொயோட்டா லங்கா ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.