ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதியின் மானியம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் 50000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தற்போது பொய்யான செய்தி பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ளது.

தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தச் செய்தியுடன் போலி இணைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி மாநாட்டில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெரிவிப்பது அரசாங்கத்தின் முறையாகும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | President S Subsidy 50 000 Per House Fake News

அத்துடன், சமூக ஊடக ஆர்வலர்கள் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும், ஆதாரமற்ற பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது பகிர்வதையோ தவிர்க்குமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.